மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம்ஓன்றியம் செம்பூண்டி கிராமத்தில் குடிபோதையில், விவசாயியை வெட்டி க்கொன்ற சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம்ஓன்றியம் செம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 52) இவர் விவசாயி. அதேப்பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 27) விவசாயி செல்லப்பனுக்கு உறவினர் இந்த ஏழுமலை. சில மாதங்களுக்கு முன்பு நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல செல்லப்பன் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டுக்கு வந்தபோது எதிரில் குடிபோதையில் ஏழுமலை வந்து அவரிடம் தகராறு செய்துக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்லப்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுப்பற்றி தகவலறிந்த மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்பி. ராஜேந்திரன், மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் நேரில் சென்று விசார்த்தனர். இறந்து போன விவசாயிக்கு ராணி என்ற மனைவியும், 2மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

